ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் ‘முரண்பாடுகளைத் தீர்த்தல்’ என்னும் தொனிப்பொருளில் பொது மக்களுடனான கலந்துரையாடல் நல்லூர் பிரதேச செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜேசிங்க கலந்துகொண்டு நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
குறிப்பாக இந்த கலந்துரையாடலில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள் பற்றியும் அவற்றைத் தடுப்பது தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் வசந்தகுமார், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், நல்லூர் பிரதேச பிரிவிற்குட்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம அலுவலர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
அத்துடன் யாழ் மாவட்டத்தில் ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் இந்த முரண்பாடுகளைத் தீர்த்தல் தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் வியாழக்கிழமை காரைநகர், உடுவில் ஆகிய பிரதேச செயலகங்களில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளதாக நல்லூர் பிரதேச செயலர் செந்தில்நந்தன் தெரிவித்துள்ளார்.