முதலமைச்சரின் புதிய அலுவலகம் இன்று திறந்துவைப்பு,ஆளுநர் பங்கேற்கவில்லை!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய அலுவலகத் திறப்பு விழாவில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொள்ளவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vickneswaran

இல. 26, யாழ். சோமசுந்தரம் வீதியிலுள்ள உள்ளூராட்சி அமைச்சின் புதிய அலுவலகம் இன்று வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்ட நிலையில், சி.வி.விக்னேஸ்வரன் தனது பணிகளை ஆரம்பித்தார்.

தற்போது வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் ஆகியோருடன் எதிர்காலத்தில் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றன.

இதில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts