முச்சக்கரவண்டி விபத்து ; மூவர் படுகாயம்

accidentமுச்சக்கரவண்டி ஒன்று தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ். கரந்தன் சந்தி புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த பத்மலிங்கம் அனெஸ்ரின் (வயது 20), புகையிரத வீதி சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரம் சுஜீந்திரன் (வயது 27) ஊரெழு பகுதியைச் சேர்ந்த துரைசாமி லோகாஸ் (வயது 23) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts