மீண்டும் ‘சபாஷ் நாயுடு’ பணியில் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் அவருடைய அலுவலகத்தின் மாடிப் படியிலிருந்து தவறி விழுந்ததில் அவருடைய காலில் அடிபட்டு சுமார் 25 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

kamal

அறுவை சிகிச்சைக்குப் பின் ஓய்வில் இருந்த கமல்ஹாசன் கடந்த வாரம்தான் மற்றவர்களையும் சந்திக்க ஆரம்பித்தார்.

‘செவாலியே’ விருது அவருக்கு வழங்கப்பட உள்ளதைத் தொடர்ந்து அவரைப் பாராட்ட வந்தவர்கள் அனைவரையும் சந்தித்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படங்களைப் பார்த்த பிறகுதான் கமல் எவ்வளவு உடல் மெலிந்துள்ளார் என்று தெரிந்தது.

தற்போது தன்னுடைய ‘சபாஷ் நாயுடு’ எழுத்துப் பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஓடுவதற்குத் தயாராக உள்ளதாகவும், மனம் மீண்டும் பறப்பதாகவும் தெரிவித்துள்ளார். கொஞ்சத்தில் தப்பியதைப் பற்றி பின்னர் தெரிவிப்பதாகவும், விழுவதுடன் முடிந்துவிடாது என்றும் டாக்டர்களுக்கும், பிஸியோதெரப்பிஸ்ட்டுக்கும், நலம் விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. அதற்கு முன்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts