மீசாலையில் மூவர் கைது?

மீசாலை மேற்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை இரவு 10 மணிக்குப் பின்னதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை பொலிஸின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினராலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கூட்டுறவுச் சங்கக் கடை ஒன்றின் முகாமையாளர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக மேலதிக தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

Related Posts