மிதமிஞ்சிய போதை! உரும்பிராயில் இளைஞன் பலி!!

அதீத போதை காரணமாக உரும்பிராயில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் தெற்கை சேர்ந்த 21வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் , தந்தையும் சகோதரியும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். அந்நிலையில் இளைஞன் பாட்டியுடன் உரும்பிராயில் வசித்து வருகின்றார்.

கடந்த 29ஆம் திகதி அதீத போதையில் வீட்டுக்கு வந்த இளைஞன் நாலைந்து தடவைகள் வாந்தி எடுத்து விட்டு படுத்துள்ளார்.

பாட்டியரும் போதையில் தான் இளைஞன் படுத்துள்ளான் என நினைத்துள்ளார்.

ஆனாலும் நீண்ட நேரமாகியும் இளைஞன் எழும்பாததால் இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை இளைஞன் உயிரிழந்து சில மணி நேரம் ஆகிவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

Related Posts