மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சிறிஸ்கந்தராசா சிறிரஞ்சுனிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸார் தன்னை நேற்று வெள்ளிக்கிழமை மாலை விசாரணைக்கு அழைத்ததாகவும் அதனடிப்படையில் தான் விசாரணைக்கு முகம்கொடுத்ததாகவும் பிரதேச சபை உறுப்பினர் சிறிஸ்கந்தராசா சிறிரஞ்சுன் தெரிவித்தார்.
யுத்தத்தின் போது உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கடந்த 14 ஆம் திகதி திங்கட்கிழமை சாவகச்சேரி பிரதேச சபையில் தீமானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானம் தன்னால் முன்வைத்தமையடுத்தே இவ்வாறு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அந்த உறுப்பினர் தெரிவித்தார்.
தீர்மானத்தை எதற்காக முன்வைத்தீர்கள் இதனை முன்வைக்கச் சொன்னது யார்? இதற்கு யார் யார் ஆதரவு வழங்கினார்கள்? என்று பொலிஸார் தன்னிடம் கேள்வி எழுப்பியதாகவுமு; அதற்கு தான் தெளிவாகப் பதிலளித்துள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி