மாவீரர்களின் படங்களை வீடுகளில் வைத்திருப்பதற்கு எந்த விதமான தடையும் இல்லை – கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி !

இலங்கை அரச படையினருக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர்களின் படங்களை பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் வைத்திருப்பதற்கு எந்த விதமான தடையும் இல்லை என கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி பிரிகேடியர் ரேணுகா ரொவல் குறிப்பிட்டுள்ளார். நேற்று முறிகண்டியில் நிலப்பிரச்சினை தொடர்பான சந்திப்பில் அப்பகுதி மக்கள் மத்தியில் உரையாற்றிய பொழுதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தினர் சில மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தனர் அந்த வீடுகளுக்கு குடியேறிய மக்கள் முதன் முதலில் ஆணிகளை அடித்து சில படங்களை கொழுவினார்கள்.அந்தப் படங்கள் யாருடையவை தெரியுமா அரச படைகளுக்கு எதிராக யுத்தம் செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வரிச்சீருடை அணிந்த மாவீரர்களின் படங்கள்.அவர்கள் எங்களுக்கு எதிராக யுத்தம் செய்த பொழுதும் அவர்கள் தமிழ் மக்களின் பிள்ளைகள் என்பதை எப்படி மறுப்பது என்று குறிப்பிட்ட பிரிகேடியர் ரேணுகா ரொவல் அதனை எந்த இராணுவ உறுப்பினரும் தடுக்க கூடாது என்று தான் உத்தரவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

வடக்குகிழக்கில்  இருந்த அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களும் அழிக்கப்பட்டுவிட்டன என்பது இங்கு நினைவுகூரத்தக்கது

Related Posts