மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயமானது 1990 ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதால ஆலயமும், ஆலயத்தேரும் சேதமடைந்தது காணப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது இவ்வாலயத்திற்காக 45 அடி உயரமுள்ள தேர் ஒன்று தெஹிவளையில் அமைக்கப்பட்டு வருகின்றது.
இத்தேருக்கான அடிச்சட்டம் ஞாயிற்றுக்கிழமை தைப்பூசத்தினத்தன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அத்துடன் தேருக்கான புதிய தேர் இருப்பிடமும் அமைக்கப்படுகின்றது. இதேவேளை, ஆலயமும் புனரமைப்பு செய்யபட்டு வருகின்றது.