மாதகல் பகுதியில் எலும்புக்கூடு மீட்பு

elumbukooduகைவிடப்பட்ட மலசல குழியில் இருந்து இனம் தெரியாத ஒருவரின் எலும்புக்கூட்டு மீட்கப்பட்டுள்ளது.சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாதகல் கிழக்கு ஜே.152 கிராம அலுவலர் பிரிவிலிருந்து இந்த எலும்பு கூடு மீட்கப்பட்டுள்ளது.

மாதகல் பகுதியில் உள்ள உதயதாரகை சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தூர்ந்துபோன நிலையில் காணப்பட்ட மலசல கூடக் குழியை துப்பரவு செய்யும் நடவடிக்கையை வீட்டு உரிமையாளாகள் நேற்று மாலை மேற்கொண்டனர்.
இந்த நேரத்தில் மண்டையோடு வாயின் பற்கள் உள்ளடக்கிய தாடைப் பகுதி காலின் துடை எலும்பு என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது சம்பந்தமாக இளவாலைப் பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறிப்பிட்ட இடத்திற்கு சென்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்திக்க என். பண்டாரா தலைமையிலான குழுவினர் அந்த குழியிலிருந்து எலும்பு கூடொன்றை மீட்டனர்.

அந்த இடத்திற்கு சென்ற மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிபதி பி.ஜே.தம்பித்துரை சட்டவைத்தியதிகாரியுடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன் எலும்பு கூட்டை யாழ் போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related Posts