மாணவர்களை விடுதலைச்செய்யுமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைகழகத்தைச் சேர்ந்த மாணவர்களை விடுதலைச்செய்யுமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு அளிப்பதற்காக தடுத்து வைக்கப்படவுள்ளதால், உடனடியாக அவர்களை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பல்கலை நிர்வாகத்தினரை வலியுறுத்தியுள்ளதாக அச்சங்கத்தின்; சங்க தலைவர் அ.இராஜகுமாரன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் விடுதலை குறித்த அவசர கலந்துரையாடல் கலைத்துறை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய குழுவினரை உடனடியாக நியமிக்க தீர்மானித்;துள்ளதாகவும், தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை குறித்து பல்கலைக்கழகம் உடனடியான தீர்வினை பெற்றுத்தருமாறும் பல்கலை நிர்வாகத்தினரிடம் யாழ். பல்கலை ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Posts