மாகாண மட்ட சித்திரப் போட்டியில் தரம் 1 மாணவி இரண்டாமிடம்

Vaishnaviமல்லாகம் கோட்டைக்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவியான கஜேந்திரன் வைஷ்ணவி வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட சித்திரப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு புகழ்சேர்த்துள்ளார்.

இவர் கோட்ட மட்டம் மற்றும் வலய மட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு முதலாம் இடத்தைப் பெற்றுள்ள நிலையில் மாகாண மட்டத்திலும் இரண்டாம் இடததைப் பெற்றுள்ளார்.

இப்பாடசாலையில் சுமார் அறுபத்தைந்து மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இவர்கள் மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த மாணவியின் சாதனை பாடசாலைக்கு புகழைத் தேடித் தந்துள்ளதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

Related Posts