மாகாணமட்ட தமிழ்த்தினப் போட்டியில் தம்பசிட்டி மெ.மி.த.க பாடசாலை மாணவன் முதலிடம்

R-vithushanவடமாகாண தமிழ்த்தினப் போட்டியில் கீழ்ப்பிரிவில் யாழ். தம்பசிட்டி மெ.மி.த.க பாடசாலை மாணவன் செல்வன். இராசசேகர் விதுஷன் ஆக்கத்திறன் வெளிப்பாடு போட்டியில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

இவர் யாழ். தம்பசிட்டி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 5 இல் கல்வி கற்று வருகின்றார்.

போட்டியில் முதலிடத்தை பெற்றதன் அடிப்படையில் செல்வன். இராசசேகர் விதுஷன் எதிர்வரும் யூலை மாதம் 6ஆம் திகதி கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெறவுள்ள அகில இலங்கை தேசிய தமிழ்த்தினப் போட்யிலும் பங்குபற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts