மழை பெய்யாவிட்டால் நெற்பயிருக்கு பாதிப்பு

வறட்சி காரணமாகத் தாழ்ந்த வயல்களில் தண்ணீர் வற்றி அவை சதுப்பு நிலமாகவே காணப்படுகின்றன.இன்னும் ஒருவார காலத்துக்குள் மழை பெய்யாவிட்டால் குடாநாட்டில் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள பெரும்போக நெற்செய்கை பாதிக்கப்படும் என விவசாயத் திணைக்கள அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

தற்போது நிலவும் வறட்சி காரணமாகத் தாழ்ந்த வயல்களில் தண்ணீர் வற்றி அவை சதுப்பு நிலமாகவே காணப்படுகின்றன. இதனை விட மேட்டு நில வயல்களில் தண்ணீர் முற்றாக வற்றியமையால் நிலத்தில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இன்னும் குறைந்தது ஒருவார காலத்துக்குள் மழை பெய்ய வேண்டும். இல்லையேல் நெற் பயிர்கள் முழுமையாகப் பாதிப்படையும் நிலை ஏற்படும். தற்போது வழமையான மாரி மழையை நெற்பயிர்ச் செய்கையாளர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

அனேகமான வயல்களில் தண்ணீர் வற்றியதால் விவசாயிகள் உரப்பசளைகளை கூட விசிற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. என்றார்.

Related Posts