மருதனார்மடம் கொரோனா கொத்தணி: தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில்நேற்று (வியாழக்கிழமை) 607 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், உடுவிலில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 131 ஆக அதிகரித்துள்ளது.

Related Posts