மரதன் ஓட்டத்தில் பங்கேற்று 91 வயது மூதாட்டி சாதனை

அமெரிக்காவில் 42 கிலோ மீட்டர் மரதன் ஓட்டத்தில் பங்கேற்று 91 வயதான மூதாட்டி சாதனை படைத்துள்ளார்.

Hareyath-thamson

சான் டியாகோ நகரில் நடைபெற்ற 42 கிலோ மீட்டர் தூர மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 91 வயது மூதாட்டி ஹேரியத் தாம்சன் 7 மணி நேரம், 7 நிமிடம், 42 வினாடிகளில் அந்த தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார்.

இவர் இரண்டு முறை புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர். இந்நிலையில் இவர் புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் நிறுவனத்துக்கு நிதி திரட்டும் முயற்சியில் கடந்த 15 ஆண்டுகளாக மரதன் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

இதுவரை இவர் 90 ஆயிரம் டாலர் நிதியை திரட்டி தந்துளார். கடந்த வாரம் நடைபெற்ற சான் டியாகோ மரதன் ஓட்டத்தில் பங்கேற்றவர்களுள் வயது முதிர்ந்த பெண் இவர் மட்டும்தான்.

இவரது வயதில் உள்ளவர்கள் பந்தய தூரத்தை கடக்க எடுத்துக் கொள்ளும் சராசரி நேரத்தை விட இவர் 3 மணி நேரம் முன்னதாக வந்தடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts