மயிலிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி

daklausவலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்கு உட்பட்ட மயிலிட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள இந்து, கிறிஸ்தவ ஆலயங்களுக்குச் சென்று பொதுமக்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் 5ஆம் திகதி குறித்த பகுதியில் நடைபெறவுள்ள ஆலயத் திருவிழாவிற்கு செல்ல அனுமதி பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவனந்தாவிடம் மயிலிட்டி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க குறித்த பகுதிக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா தெரிவித்தார்.

இதற்கமைய நாளை செவ்வாய்க்கிழமை ஆலயத் துப்புரவு பணிகளுக்காக 30பேர் மயிலிட்டிப் பகுதிக்குச் செல்லவுள்ளதாகவும் எதிர்வரும் 5ஆம் திகதி மயிலிட்டியைச் சேர்ந்த 1000பேர் தங்கள் பகுதிக்குச் சென்று அங்குள்ள ஆலயங்களில் வழிபாடுகளை செய்யவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts