ஆன்மீக தலங்கள் மற்றும் மத சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது குறித்து உடன் நடவடிக்கை எடுக்க விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மாறுபட்ட சில மதங்களை பின்பற்றும் மக்கள் வாழ்வதாகவும், மத ஸ்தலங்களில் நிகழும் சம்பவங்கள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் முறைப்பாடுகள் செய்ய முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த விசேட பிரிவு 2013.02.10 திகதி முதல் காலை 8 மணி தொடக்கம் 24 மணிநேரங்களும் தொழிற்படும் என அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, மத ஸ்தலங்களில் அல்லது மதம் குறித்து இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் பொது மக்கள் 0113182904 மற்றும் 0113188753 ஆகிய தொலைபேசி இலக்கங்களிற்கும் 0112423944 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் முறைப்பாடுகளை அனுப்பலாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.