மங்காத்தா2 உருவாகுமா? வெங்கட்பிரபு

வளர்ந்து வரும் நடிகர்களை வைத்து படம் இயக்கி வந்த வெங்கட்பிரபுவுக்கு அஜித்தின் மங்காத்தா படத்தை இயக்கிய பிறகு நட்சத்திர இயக்குனர் அந்தஸ்து கிடைத்தது.

ajith-venkat-pirabu

அதன்பிறகுதான் அவர் சூர்யா, கார்த்தியை வைத்து படங்கள் இயக்கினார். ஆனால் அப்படி அவர் இயக்கிய படங்கள் தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தில் நடித்த நடிகர்களை வைத்தே தற்போது இயக்கியிருக்கிறார்.

இந்த நிலையில், இந்த படம் வெளியானதும் அவர் அஜித்தை வைத்து மங்காத்தா-2 வை இயக்க தயாராகிக்கொண்டிருப்பதாக இணையதளங்களில்செய்திகள்.வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

ஆனால் அதுகுறித்து வெங்கட்பிரபுவைக் கேட்டால், மங்காத்தா-2வை இயக்க நான் இப்போதுகூட ரெடியாக இருக்கிறேன். ஸ்கிரிப்ட்டும் தயாராக உள்ளது. ஆனால், அஜித் சார் தயாராக வேண்டுமே. அவரது அழைப்புக்காகத்தான் காத்திருக்கிறேன்.

அவர் சொன்னால் மட்டுமே மங்காத்தா-2 உருவாக சாத்தியம் உள்ளது என்கிறார் வெங்கட்பிரபு.

Related Posts