மகேஸ்வரி நிதியம் சட்ட பூர்வமான அமைப்பு – எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா

thavarasaமகேஸ்வரி நிதியம் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு நிதியம். அதற்குரிய சட்ட திட்டங்கள் நாடாளுமன்றத்தில் இருக்கின்றது அதை அங்கு எப்போதும் பார்வையிடலாம் அதன் வரவு செலவுகள் எல்லாம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என ஈ.பி.டி.பியின் வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராசா வடமாகாண சபையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகேஸ்வரி நிதியத்தின் உரிமையாளர் மற்றும் பல விடயங்கள் எல்லாம் நாடாளுமன்றில் இருக்கின்றது. அது ஒரு மறைமுகமான விடயம் அல்ல யாரும் பார்க்கலாம் உங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அவர்கள் மூலம் பார்த்து அறியுங்கள்.

இது தொடர்பாக 3 வழக்குகள் தொடரப்பட்டு அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. நீங்கள் கேட்கும் கேள்வி நியாயமானது ஆனால் அவற்றிற்கான பதில் நாடாளுமன்றில் இருக்கின்றது. மணல் அகழ்வுக்கு சம்பந்தப்பட்ட இரண்டு அமைச்சுக்களின் அனுமதி பெறப்பட்டு மேற்கொள்ளப்படுவதுடன் இம்மணல் அகழ்வு செய்யும் பகுதியில் கண்காணிக்கவென இரு அரச அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த மண் அகழ்வில் தவறுகள் இருந்தால் அது குறித்து மகேஸ்வரி நிதியத்திடம் எடுத்துக்கூறுவோம் அதற்கு நானும் வருகிறேன். நடைமுறை செயற்பாடுகளில் பிழைகள் இருந்தால் அவற்றை எடுத்துக்கூறி திருத்தங்கள் மேற்கொள்ள நானும் ஒத்துழைக்கின்றேன். முழுக்க முழுக்க மகேஸ்வரி நிதியம் சட்ட பூர்வமானது அது சட்ட விரோதமானது அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts