போலி நகைகளை 4 முறை வங்கியில் அடகு வைத்தவர் கைது

தங்கம் எனக் கூறி போலி நகைகளை வங்கிகளில் அடகு வைத்தார் என்ற குற்றச்சாட்டில் நெல்லியடியில் ஒருவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த காலங்களில் நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் தங்கம் எனக் கூறி போலி நகைகளை 4 வங்கிகளில் 4 தடவைகள் அடகு வைத்து பணத்தைப் பெற்றிருந்தார்.

குறித்த நபர் 2010 ஆண்டு காலப்பகுதியிலேயே இவ்வாறு போலி நகைகளை அடகு வைத்து பணத்தைப் பெற்றிருந்தார். அது
குறித்து தகவல் வங்களின் ஊடக நெல்லியடிப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

ஆனாலும் அவர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் சமுகமளிக்காத காரணத்தினால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதன்படி குறித்த நபரை நெல்லியடி பொலிஸார் கடந்த 15 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

அதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் 2 பாரிய குற்றங்களைச் செய்துள்ளதற்கான தகவல்களும் அடகு வைத்ததற்கான பற்றுச்சீட்டும் அவரிடம் இருந்தது கைப்பற்றப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் தொடர்பில் புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Posts