போலி இணையத்தளம் ஊடாக மோசடி! மூவர் கைது

top-fake-money-making-websitesவெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி போலி இணையத்தளம் ஊடாக மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தென்கொரியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகத் தெரிவித்து பாரியளவில் மோசடியில் ஈடுபட்ட கொள்ளுப்பிட்டியைச் சேர்ந்த தம்பதியினரும் மற்றுமொரு பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் இணைய தளத்திற்கு நிகரான ஒரு போலி இணையத்தளத்தை தயாரித்தே அவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts