போட்டிப் பரீட்சையில் தெரிவான கிராம சேவகர்களுக்கு மார்ச் 6 இல் நியமனம்

Job_Logoதிறந்த போட்டிப் பரீட்சைமூலம் தெரிவான 3500 கிராம சேவகர்களுக்கான நியமனம் எதிர்வரும் மார்ச் 6ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி. பி.அபேகோன் தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும் விசேட வைபவத்தில் ஜனாதிபதி புதிதாக தெரிவான கிராம சேவகர்களுக்கான நியமனத்தைக் கையளிக்கவுள்ளார்.

திறந்த போட்டிப் பரீட்சையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய கிராம சேவகர்களின் பெயர் விபரங்கள் கடந்த வாரம் இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் அமைச்சினால் தற்போது அனுப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

புதிதாக நியமனம் பெறும் கிராம சேவகர்கள் வடக்கு கிழக்கு உட்பட வெற்றிடமுள்ள பிரதேசங்களுக்கு நியமிக்கப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts