போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தல்

சாரதி பயிற்சி வழங்கும் போது வீதி ஒழுங்குமுறை மற்றும் வீதி சமிக்ஞைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்துமாறு யாழ். பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.மொஹமட் ஜெப்ரி தெரிவித்துள்ளார்.தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச்சபை பேருந்து ஊழியர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் வியாழன் மாலை யாழ். பொது நூலகத்தில் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் வீதி ஒழுங்கு முறை மற்றும் வீதி சமிஞ்ஞைகளை சாரதிகள் ஒழுங்காக் கடைப்பிடிப்பதில்லை என குற்றஞ்சாட்டிய அவர், வீதி ஒழுங்குகளையும், சமிஞ்ஞைகளையும் மீறும்பட்சத்தில் ஏற்படும் பாரிய விளைவுகள் மற்றும் தண்டனைகள் பற்றி விரிவாக சாரதிகளுக்கு எடுத்துரைக்குமாறும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பயிற்சி வழங்குனர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக் கூறினார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related Posts