பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு

meeting_jaffna_police_jeffreeyதமிழ் – சிங்கள வருடப்பிறப்பை முன்னிட்டு பொலிஸார் விசேட கடமையில்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தில் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜிவ்ரி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. அதன் போது புத்தாண்டை முன்னிட்டு பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் மற்றும் ஏனைய பகுதிகளிலும் பொலிஸார் விசேட பாதுகாப்புக் கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸார் ரோந்து நடவடிக்கையிலும், சிவில் உடையிலும் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் புத்தாண்டை முன்னிட்டு 13, 14ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும். குறித்த நாட்களில் வெளியிடங்களில் வைத்து மதுபானங்கள் விற்பனை செய்பவர்களையும் குடிபோதையில் நடமாடுபவர்களும் கைது செய்யப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை


யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் 154 பேர் கைது

யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸார் பாரிய குற்றங்களைத் தடுக்கும் நோக்குடன் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளில் கடந்த வாரம் 154 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி நீதிமன்றத்தினால் விசாரணைக்குச் செல்லாது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் அனுமதியின்றி சாராயம் விற்பனை செய்த 10 பேரும், சந்தேகத்தின் பேரில் 16 பேரும், குடித்து விட்டு கலகம் விளைவித்த 15 பேரும், அடித்துக் காயப்படுப்படுத்தியமை தொடர்பில்32 பேரும்,வீதிவிபத்து தொடர்பில் 5 பேரும் , குடிபோதையில் வாகனம் செலுத்திய 12 பேரும் பொருளை உடைத்து நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் 3 பேரும், களவாக மின் இணைப்பை எடுத்துக் கொண்ட குற்றத்திற்காக 5பேரும், அத்துமீறி வீட்டில் நுழைந்த குற்றத்திற்காக 2 பேரும், சூழலை மாசுபடுத்தினர் என 4பேரும் ,களவுடன் தொடர்புடைய 4பேரும், சமாதானத்திற்கு குழப்பம் விளைவித்த குற்றத்தில் ஒருவரும் என இரண்டு பிரிவிலும் இருந்து 154 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

யாழில் 19 வயது இளம் யுவதியைக் கடத்திய மூவரில் ஒருவர் கைது

யாழ். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட பகுதியில் 19 வயது இளம் யுவதியை மூன்று பேர் சேர்ந்து கடத்திச் சென்றுள்ளதாகவும், கடத்தியவர்கள் தொடர்பில் குறித்த பெண்ணின் தாயார் கொடுத்த முறைப்பாட்டினை தொடர்ந்து,

விசேட பொலிஸ் குழு அமைக்கப்பட்டு குறித்த யுவதி கடத்தியவர்கள் தொடர்பாக புலனாய்வுத் தகவல்கள் பெறப்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.

இந்தக் கடத்தலில் தொடர்புடைய மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த யுவதியை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மூவரில் இருவர் தலைமறைவாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts