காவல்துறை உத்தியோகத்தர்கள் பீதியடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இரவு நேரங்களில் வீதிச் சோதனைச் சாவடிகளில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பீதியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆயுதம் தாங்கிய கொள்ளையர்கள் மற்றும் குற்றவாளிகள் தாக்குதல் நடத்தக் கூடுமென காவல்துறை உத்தியோகத்தர்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் குருணாகல் பிரதேசத்தில் காவல்துறை உத்தியோகத்தர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு உத்தியோகத்தர் கொல்லப்பட்டிருந்தார்.
இவ்வாறான சமப்வங்களின் மூலம் காவல்துறை உத்தியோகத்தர்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். காவல்துறை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் அவர்களுக்கு கைத்துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்துவது எந்ததெந்த நேரங்களில் தற்பாதுகாப்பு அடிப்படையில் ஆயுதங்களை பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், பயிற்சிகள் வழங்கப்பட்டள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.