பொன் அணிகளின் போர் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

judgement_court_pinaiவட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பொன் அணிகளின் போர் துடுப்பாட்டத்தில் பழைய மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் அடித்துக் கொலை செய்யப்பட்ட ஜெயரட்ணம் தர்ஷன் அமல்ராஜ்ஜின் (23) கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சுந்தரலிங்கம் சிவகர் (22), சிவசங்கநாதன் மதுஷன் (20), இன்பசீலன் பிருந்தாமன் (21), ரமேஷ் கொன்ரன்கரன் (21) நால்வரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் பஷீர் மொஹமட் ஞாயிற்றுக்கிழமை (16) உத்தரவிட்டார்.

மேற்படி நால்வரையும் நீதவானின் வாசஸ்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை (16) மாலை ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பொன் அணிகளின் போர் விவகாரம், நால்வர் கைது

பொன் அணிகளின் போரில் கைகலப்பு ஒருவர் பலி

Related Posts