நெடுந்தீவு பிரதேசத்தில் பேரிச்சம்பழ செய்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் ஆழ்வார்ப்பிள்ளை ஸ்ரீ தெரிவித்தார்.
விவசாய திணைக்களத்தின் ஊடாக இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதற்காக பொருளாதர அபிவிருத்தி அமைச்சினால் 1.5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பேரிச்சம்பழ செய்கை அறிமுக திட்டத்தினை செயற்படுத்துவதற்கான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.