பெண்கள்,சிறுவர்கள் மீதான வன்முறையினைக் கண்டித்து நல்லூரில் ஊர்வலம்

பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறையினைக் கண்டித்து நல்லூரில் நேற்று ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.

விழுது நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ். மாவட்ட பெண்கள் சமாசத்தினர் இணைந்து பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறையினை ஒழிப்போம் என்ற கருத்தினை முன்வைத்து ஊர்வலம் ஒன்று நடாத்தப்பட்டது.

இந்த ஊர்வலமானது நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து பருத்தித்துறை வீதியாகச் சென்று சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள திவ்யஜீவன் சங்க மண்டபத்தில் நிறைவடைந்தது.

இதன் போது குடும்ப வன்முறையினை ஒழிப்போம், பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாப்போம், சீதனக் கொடுமையினை ஒழிப்போம், போன்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளைத் தாங்கியவாறும் ஊர்வலம் நகர்ந்து சென்றது.

இந்த நிகழ்வில் விழுதுகள் நிறுவனப் பணிப்பாளர் திருமதி சாந்தி சச்சிதானந்தம், வைத்திய அதிகாரிகள், யாழ். மாவட்ட பெண்கள் சமாசத்தினர், யாழ். மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

women_jaffna

women_jaffna_1

women_jaffna_3

women_jaffna_2

women_jaffna_4

Related Posts