பூசணிக்காய் திருடிய இருவருக்கு விளக்கமறியல்

judgement_court_pinaiபட்டப்பகல் வேளையில் தோட்டத்துக்குள் புகுந்து பூசணிக்காய்களைத் திருடிய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று இணுவில், சிங்கத்தின் கலட்டி வீதியில் இடம்பெற்றுள்ளது.

நண்பகல் வேளையில் தோட்ட வெளியில் உள்ள கள்ளுத் தவறனைக்கு முன்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு தோட்டத்தில் உள்ள பூசணிக்காய்களைப் பறித்துக்கொண்டிருந்த சந்தேகநபர்கள் தொடர்பில் வழங்கப்பட்ட தகவலை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த வந்த பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

Related Posts