புடவை வியாபாரிகள் இருவர் கைது

arrest_1சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட புடவைகளை விற்பனை செய்த இருவரை கைது செய்ததாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். காங்கேசன்துறை வீதியில் வைத்து பல இலட்சம் பெறுமதியான புடவைகளை விற்பனை செய்ய முயன்ற வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்து கருணாரட்ண தலைமையிலான யாழ். விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரிடம் இருந்து 20க்கும் அதிகமான புடவை பொதிகளும் புலனாய்வு பொலிஸ் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களையும், மற்றும் புடவை பொதிகளையும் யாழ். நீதமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக யாழ். பொலிஸார் மேலும் கூறினர்.

Related Posts