புடவை கடை தீயினால் எரிந்து நாசம்

யாழ். மின்சார நிலைய வீதியிலுள்ள புடவை விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீயினால் அந்த புடவைக்கடை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

jaffna_shop_fire

இந்த சம்பவம் நேற்று இரவு 9 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தின் புடவைக் வியாபாரத் தொகுதிகளைக் கொண்ட வீதியிலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவுவதை கேள்வியுற்று ஸ்தலத்திற்கு விரைந்த மாநகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயினை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இதனால் தீ ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

உரிமையாளர் வியாபார நிலையத்தினை பூட்டிவிட்டுச் சென்றுள்ள நிலையிலேயே இந்த தீ விபத்து ஏற்படடுள்ளதாகவும் விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts