நேற்று யாழிற்கு வருகை தந்த பிரிட்டன் தூதுக்குழு யாழ் பொது நூலகத்திற்கு விஜயம் செய்துள்ளது.
பிரிட்டன் பரதமர் டேவிட் கமரூனின் யாழ்.பயணத்தை நினைவுகூரும் வகையில் அவரிடமிருந்து ஒரு தொகுதி நூல்கள் கையளிக்கப்பட்டன.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் , பிரித்தானிய அரசியல் குழுக்களின் தலைவர் டானியல் பெயின்ரர் ஆகியோர் அடங்கிய இந்த குழுவினர் பொது நூலகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக பிரதம நூலகரிடம் கேட்டறிந்துகொண்டனர்..
மேலும் சிறுவர் பகுதிக்கு ஒரு தொகை நூல்களை அன்பளிப்பாக வழங்கியதோடு யாழ் பொது நூலகத்தையும் பார்வையிட்டனர்.