பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்!!

விடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69-வது பிறந்தநாள் விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. அப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனவும் பிரபாகரன் திரும்பி வருவார் என்றும் அந்த நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம் என்றுமதிமுக செயலாளர் வைகோ கூறி உள்ளார்.

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதிமுக கட்சித் பொதுச் செயலாளர் வைகோ அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் மதிமுக கட்சித் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்கள் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கை தமிழர்களுக்காக போராடிய எங்கள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் இன்னும் என்னத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

பழ நெடுமாறன் ஆகியோர் விடுதலை புலிகளுடன் பழ ஆண்டுகளாக இருந்தவர்கள் அவர்கள் யாரும் பொய் சொல்ல வேண்டும் என எந்த அவசியமும் கிடையாது. பிரபாகரன் திரும்பி வருவார் எனும் நம்பிக்கையுடன் நாங்கள் உள்ளோம். அவர் உயிருடன் இருக்கின்றார் என்பதே எங்களது கருத்து.என வைகோ தெரிவித்துள்ளார்.

Related Posts