பிரதேசத்தின் அபிவிருத்தியிலேயே ஒரு நாட்டின் அபிவிருத்தி தங்கியுள்ளது: யாழ். அரச அதிபர்

suntaram-arumainayakam4பிரதேசத்தின் அபிவிருத்தியிலேயே ஒரு நாட்டின் அபிவிருத்தி தங்கியிருக்கின்றது என்று யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள இந்தியன் வங்கியின் இரண்டாம் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

வங்கிகளில் நாங்கள் பெறும் கடன்கள் நல்லநோக்கத்திற்காக பயன்படுத்தவேண்டும் அவ்வாறு பயன்படுத்தி எங்களை நாங்களே வளம்படுத்திக்கொள்ள வேண்டும் அவ்வாறு வளப்படுத்திக்கொள்ளும் போது தான் எங்கள் பிரதேசங்கள் அபிவிருத்தி அடையும் என்றார்.

அத்துடன் பிரதேசங்கள் அபிவிருத்தி அடையும் போது மாவட்டம் அபிவிருத்தி அடையும் மாவட்டம் அபிவிருத்தி ஒரு நாட்டின் அபிவிருத்தியை தீர்மானிக்கின்றது எனவே பிரதேசத்தின் அபிவிருத்தியில் தான் நாட்டின் அபிவிருத்தி தங்கியிருக்கிறது என்றார்.

அத்துடன் வடமாகாணத்தின் அபிவிருத்திக்கு இந்திய அரசு பெரும் பங்காற்றி வருவதோடு மக்கள் நலன் சார்ந்த பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது என்றார்.

Related Posts