பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 25 பேர் கைது

நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 25 பேரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளதாக யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.முகமட ஜெவ்ரி இன்று(7) தெரிவித்தார் யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்..

அதேவேளை, சிறு குற்றங்கள் புரிந்தவர்களில் கஞ்சா விற்பனை செய்த 6 பேரும் அனுமதி பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்த 8 பேரும் சட்டவிரோத மணல் ஏற்றியவர்கள் 4 பேரும் சந்தேகத்திற்குகிடமாக நடமாடிய 7 பேரும் திருட்டு சம்பவத்தில் 4 பேரும் காசோலை மோசடி செய்த இருவர் உட்பட 54 பேர் கடந்த வாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts