பால் மாவின் விலைகள் தை 2 முதல் அதிகரிப்பு

தை இரண்டாம் திகதி முதல் பால்மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

உலக சந்தையில் ஒரு மெட்றிக்தொன் பால்மாவின் விலை 5 ஆயிரத்து 400 டொலர்களால் அதிகரித்ததை அடுத்து, உள்நாட்டிலும் 400 கிராம் பால்மாவின் விலையை 115 ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 290 ரூபாவாலும் அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்தக் கோரிக்கைக்கமையவே பால்மாவின் விலை ஜனவரியிலிருந்து அதிகரிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜனவரி மாதம் வரை சந்தையில் பால்மாக்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவலாம் என்று கூறப்படுகின்றது.

Related Posts