பாதை மூடியமைக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

kokuvil-hinduகொக்குவில் இந்துக்கல்லூரிக்கு செல்லும் வீதியை பாவனைக்கு விடாது மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலை மாணவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலைக்கும் கோவிலுக்கும் நடுவில் காணப்படும் வீதியினை கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் கோயில் நிர்வாகத்தினர் மூடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்தை தடைசெய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இன்று காலை தடைகளை தூக்கி ஏறிந்ததால் கோயில் நிர்வாகத்திற்கும் பாடசாலை சமூகத்திற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடேன் மாணவர்கள் எதிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்- நூற்றாண்டை கடந்த எமது பாடசாலையின் மாணவர்கள் பயன்படுத்தி வந்த குறித்த வீதியை கோவில் கும்பாவிசேகம் என்ற போர்வையில் மறித்து போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தியுள்ளனர்,

இதனால் நேற்று பாடசாலைக்கு உணவுப்பொருட்கள் ஏற்றிவந்த பாரவூர்த்தி திருப்பி அனுப்பப்பட்டது என்று தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை பாடசாலைக்குள் செல்லுமாறு பணித்ததுடன் பாடசாலை நிர்வாகத்தினரையும் ,கோவில் நிர்வாகத்தினரையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இரு பகுதியினருக்கும் இடையேயான கருத்து முரண்பாடு அதிகரித்ததை தொடர்ந்து யாழ்,பொலிஸ் நிலையத்திற்கு வந்து முறைப்பாடுகளை பதிவு செய்யுமாறு கூறி பொலிஸாரால் இரு தரப்பினரும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

Related Posts