பாதுகாப்பு நிலையத்தில் விடப்பட்ட புதிய சைக்கிள் மாயம்! பாதுகாப்பு ஊழியர் விசாரணைக்கு அழைப்பு

Cycleமருதனார்மடம் சந்தை சைக்கிள் பாதுகாப்பில் விடப்பட்ட புதிய சைக்கிள் காணாமல்போனமை சம்பந்தமாக சுன்னாகம் பொலிஸாரினால் சைக்கிள் பாதுகாப்பு கடமை ஊழியர் விசாரணைக்காக நேற்று பகல் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சனிக்கிழமை மருதனார்மடம் சைக்கிள் பாதுகாப்பில் விடப்பட்ட புத்தம் புதிய சைக்கிள் ஒன்று காணாமல் போயுள்ளது. சைக்கிள் பாதுகாப்பில் நின்ற ஊழியரிடம் சைக்கிளை பாதுகாப்பில் விட்டுவிட்டு டிக்கெட் தரும்படி கேட்டபோது டிக்கெட் வழங்காது சைக்கிள் பாதுகாப்பாக இருக்கும் எனக் கூறி, குறிப்பிட்ட நபரை அனுப்பியுள்ளார்.

உரியவர் சந்தையில் தனது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வந்து சைக்கிள் பாதுகாப்பில் சைக்கிளை பார்த்தபோது சைக்கிள் களவாடப்பட்டதை கண்டுள்ளார். சைக்கிள் பாதுகாப்பு ஊழியரிடம் சைக்கிள் காணாமல் போனது பற்றி தெரிவித்தபோது வேண்டா வெறுப்பாக செயல்பட்டதுடன் உரிய பதிலையும் கூறாது இருந்துள்ளார்.

இந்நிலையில் சைக்கிளை திருட்டுக் கொடுத்தவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையை மேற்கொண்டதன் அடிப்படையில் குறிப்பிட்ட சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தின் ஊழியர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Related Posts