பாடசாலை மாணவர்களுக்கான போசாக்கு திட்ட நிகழ்வினை ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்

school-student-alunarபாடசாலை மாணவர்களுக்கான போசாக்கு திட்ட நிகழ்வினை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி யாழ் புனித பெனடிக் வித்தியாலயத்தில் நேற்று ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது மதிய உணவு, பால், முட்டை, பேரீச்சைப்பழம், விற்றமின் மாத்திரைகள் என்பன மாணவர்களுக்கு ஆளுநரினால் வழங்கப்பட்டது. முன்னதாக மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் ஆளுநர் விழா அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன், மாகாண கல்விப் பணிப்பாளர் வை.செல்வராசா மற்றும் உயர் அதிகாரிகள், கல்லூரி சமூகத்தினர் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

Related Posts