பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு

dead_water_bodyஆணைக்கோட்டையில் 11 வயது மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாடசாலைக்கு சக மாணவர்களுடன் சனிக்கிழமை சென்றிருந்த வேளையில் அம்மன் கோயில் கேணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறிவிழுந்தே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுதுமலை, ஆணைக்கோட்டை 4 ஆம் கட்டயைச்சேர்ந்த ஜேசுபாலன் சயந்தன்( வயது 11 ) என்ற மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கல்வி பயின்று வருகின்றார். பாடசாலையில் தளபாடங்களை அடுக்குவதற்காகவே குறித்த மாணவன் சென்றிருந்ததாகவும் இதன் போதே நண்பர்களுடன் இணைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts