பல ஊடகங்களுக்கு என்னை பிடிப்பதில்லை -வடக்கு முதலமைச்சர்

vicky-vickneswaran-cmஊடகங்கள் பலவற்றுக்கு என்னைப் பிடிப்பதேயில்லையே என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

வடக்கு மாகாணசபையின் அமர்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. அரை மணி நேரத்திலேயே அமர்வு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் சபாமண்டபத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை சபாமண்டபத்தின் வெளியே நின்று ஊடகவியலாளர்கள் ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆயினும் அனைவரும் வெளியேறிய பின்னர், நீண்ட நேரம் கழித்தே முதலமைச்சர் வெளியே வந்தார். முதலமைச்சரையும் ஊடகவியலாளர்கள் ஒளிப்படம் எடுத்தனர்.

அப்போது என்னைத்தானே உங்களுக்கு நிறையப் பேருக்கு பிடிக்குதில்லை என அங்கிருந்த ஊடகவியாலாளர்களிடம் கூறிக்கொண்டே சென்றார் முதலமைச்சர்.

Related Posts