பல்கலை கல்வி சாரா ஊழியர் வேலை நிறுத்தம் தொடர்கிறது ! தொடர்ந்தால் புதியவர்களை ஆட்சேர்ப்பு செய்ய வேண்டிவரும் அரசு மிரட்டல்?

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் 20 ஆவது நாளாக நாளையும் தொடருமென பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் நேற்று தெரிவித்தது. இதேவேளை தொழில் ஆணையாளர் முன்னிலையில் நாளை 4 ஆம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் ஒன்றியம் தெரிவித்தது. நேற்று முன்தினம் தொழில் ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வருகை தரவில்லை எனவும் ஒன்றியம் தெரிவித்தது.

இதனிடையே வேலைநிறுத்தத்தினை உடனடியாக கைவிடவேண்டும் எனவும் இல்லையேல் அனைவரையும் பணியில் இருந்து நீக்கி புதியவர்களை ஆட்சேர்ப்பு செய்ய வேண்டிவரும் என அரசாங்கம் அறிவித்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts