மாவீரர் வாரத்தில் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற நிகழ்வுகள் தொடர்பிலேயே பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸார் மூன்றரை மணி நேரம் தன்னிடம் விசாரணைகளை மேற்கொண்டனர் என்று, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவரான ஆர்.இராசகுமாரனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாதப் விசாரணைப் பிரிவுப் பொலிஸார் வெள்ளிக்கிழமை தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்திருந்தனர்.
இதற்கமைய, பல்கலைக்கழக வாகனத்தில் கலைப்பீட பீடாதிபதி வி.பி.சிவநாதன் மற்றும் முகாமைத்துவப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் சிவராஜா ஆகியோருடன் வவுனியா சென்றிருந்தார் இராசகுமாரன்.
விசாரணையின்போது நவம்பர் 26, 27, 28 ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவே திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டதாக இராசகுமாரன் தெரிவித்தார்.