பல்கலைக்கழகத்திற்கு மேலதிகமாக மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள்

university _grants_ commission_ srilanka2012ம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக மாணவர் சேர்ப்பில் மேலதிகமாக மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2011ம் ஆண்டில் பரீட்சை பெறுபேறுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக 5,609 மாணவ, மாணவியர் மேலதிகமாக சேர்த்துகொள்ளப்பட்டனர்.

எனினும், 2012ம் கல்வி ஆண்டுக்காக இவ்வாறு மேலதிகமாக மாணவர்களை இணைத்துக் கொள்ளப் போவதில்லை என உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயந்த நவரட்ன தெரிவித்துள்ளார்.

மேலதிகமாக 5000 மாணவ மாணவியரை சேர்த்துக் கொள்வதற்கு பல்கலைக்கழகங்களில் போதியளவு வளங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அதிகளவு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்று அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், வழமையாக வர்த்தகப் பிரிவில் 5000 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும், இம்முறை 6000த்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts