மொறகஹ கந்த சமுத்திரத் திட்டத்தை ஆரம்பித்து வைத்த போது ஜனாதிபதி கூறியது போல பயங்கரவாதத்தை அழிப்பதற்கு மிகச்சிறந்த ஆயுதம் அப்பாவி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதே என்பதனை வலியுறுத்த விரும்புவதாக தமிழர் விடுதலை முன்னணியின் தலைவர் ஆனந்த சங்கரியினால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
’66ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனிடமிருந்து எமது நாடு சுதந்திரம் அடைந்ததென்பதோடு, இன,மத வேறுபாடின்றி சகல மக்களும் மிக உற்சாகமாக கொண்டாடிய தினமாகும். 59ஆவது சுதந்திர நினைவு தினத்தைக் கொண்டாடிய தினத்தில் சிறுபான்மையினரான தமிழ்,முஸ்லிம்களின் உள்ளங்களில் மிக நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய வகையில் நீங்கள் இப்படிக் கூறியிருந்தீர்கள்.
‘தமிழ், இஸ்லாமிய மக்களின் உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாத்து அவர்களின் பிள்ளைகளுடைய எதிர்காலத்தை வளம்பெறச் செய்யவேண்டும். இதற்கு தெற்கே வாழுகின்ற சிங்கள மக்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பதனை நான் அறிவேன். இரத்த வெறிபிடித்த விடுதலைப் புலிகளின் கோரிக்கைகளை நாம் நிறைவேற்றத் தயாராக இல்லை. இருப்பினும் குறைந்த பட்சமாக ஆனந்தசங்கரி அல்லது டக்ளஸ் தேவானந்தா கூறுவதற்கு இசைய வேண்டியதே நியாயமானதும் நேர்மையானதுமாகும்.’
இந்தப் பேச்சை நீங்கள் நிகழ்த்திய வேளையில் டக்ளஸ் தேவானந்தா உங்கள் மந்திரி சபையில் அமைச்சராக இருந்தார். ஆனால் நானோ நாடாளுமன்ற உறுப்பினராகவோ அன்றி எந்த ஒரு உள்ளுராட்சி மன்றத்திலோ உறுப்பினராகவோ இருக்கவில்லை.
நான் எனது நாட்டை எவ்வளவு நேசிக்கிறேன் என்பதையும், என்னுடைய தியாகத்தையும் நீங்கள் விளங்கிக் கொண்டிருந்ததை அறிந்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். சில நபர்கள் சமஷ்டி ஆட்சிமுறையும் ஒற்றையாட்சி முறையும் தமக்கு ஒவ்வாது எனக் கூறிய காலத்தில் நான் இந்திய முறையிலான ஆட்சிமுறையே பொருத்தமான ஒரேயொரு மாற்றீடு என பிரசாரம் செய்து வந்தேன்.
அந்த நேரத்தில் நீங்கள் நியாயமாகவும் விசுவாசமாகவும் செயற்படுவதாக இருந்தால் நாங்கள் குறைந்தபட்சம் ஆனந்தசங்கரி அல்லது டக்ளஸ் தேவானந்தா ஆகியோரது வேண்டுகோளுக்காவது இணங்கிப்போகவேண்டும் என்றீர்கள். அதனால் தான் நீங்கள் ஒரு நியாயமான தீர்வுக்கு இணங்குவீர்கள் என திடமாக நம்பியிருந்தேன். இத்தோடு சமஷ்டி ஆட்சி என்ற சொற்பிரயோகத்தை விடுத்து இந்திய அமைப்பிலான முறை என்ற வார்ததையை உங்கள் இஸ்டம்போல உபயோகியுங்கள் என்று நீங்கள் ஒருநாள் என்னிடம் கூறியது எனக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
‘சிங்கள தமிழ் மக்களின் பூர்வீக தொடர்பு’ என்ற தலைப்பிட்ட கருத்துமொன்றாகும். தமிழ்நாட்டின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.
மேலும் பலவிடயங்கள் ‘நிரந்தர தீர்வு கோரும் ஒரு தேசாபிமானியின் துணிச்சல் மிக்க கோரிக்கை’என்ற தலைப்பில் எழுதப்பட்ட கடிதத்தில் அடங்கியுள்ளது. அதாவது பல்வேறு தேவைகள், பொது மக்களின் காணிகளை அரச படையினர் சுவீகரிப்பது, இராணுவத்தின் பலத்தையும், முகாம்களின் எண்ணிக்கையையும் குறைப்பது, குற்றமற்ற அப்பாவிப் பொதுமக்கள் விடுதலைப் புலிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு சிறைகளில் இருப்பவர்களை விடுவித்தல், கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் போன்றவற்றை உடைத்து சேதமாக்குவோர்கள், மற்றும் இனத்துவேசத்தை தூண்டுவோர் உடன் கைதுசெய்யப்பட்டு நீதியின் முன்நிறுத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுப்பது, இறுதி நடவடிக்கையாக இனமத வேறுபாடின்றி அனைத்து மக்களும் எவருக்கும் விசேட சலுகை இன்றி சமமாக – சமஉரிமையோடு வாழ சட்டங்களை ஏற்படுத்தி மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஆவண செய்ய வேண்டும்.
இத்தகைய சகல பிரச்சினைகளையும் தேசியப் பிரச்சனையாக கவனத்திலெடுத்து மக்களையும் நாட்டையும் பாதிக்கும் விடயங்கள் சீர்செய்யப்படவேண்டும்.
ஒரு ஒடுக்கப்பட்ட இனமான சிறுபான்மைத் தமிழ் மக்கள், சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் மகிழ்வோடு பங்கு கொள்ளும் உரிமையை இழந்துவிட்டதாகக் கருதி பங்குகொள்ளாது தவிர்த்து வருவது, நாட்டுப் பற்றுமிக்கவனாகவும், 1948 பெப்ரவரி 4ஆந்திகதி முதல் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்ட எனக்கு தாங்க முடியாத வேதனையைத் தருகிறது.
இந்நாட்டில் நான் 80 வருடங்களாக வாழ்ந்திருக்கிறேன். கடைசியாக நான் எந்தவருட சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டேன் என்பது எனக்கு ஞாபகமில்லை’ என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.