பனை அபிவிருத்தி சபையினர் தாய்லாந்து விஜயம்

palmeraboard_kaithadiபனை அபிவிருத்தி சபையினால் முன்னெடுக்கபப்பட்டு வரும் பனை சார் உற்பத்தி பயிற்சி ஆசிரியர்கள் எதிர்வரும் 22ஆம் திகதி தாய்லாந்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணத்தில் தாய்லாந்தில் மேற்கொள்ளப்படும் புதிய வடிவங்களை பயின்று அவ்வடிவங்களை இலங்கையில் உருவாக்குவதற்காக இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பனை அபிவிருத்தி சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பனை உற்பத்திகள் மற்றும் பனைசார் கைப்பணி பொருட்களின் புதிய வடிவங்களை அந்த வடிவங்களை வழங்குவதற்காக தாய்லாந்து அரசாங்கம் இணங்கியுள்ளது. அந்த வகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 8 மாவட்ட பயிற்சி ஆசிரியர்களை அழைத்துச் செல்லவுள்ளனர்.

இதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்ட பயிற்சி ஆசிரியர்களே 5 நாள் பயிற்சி வழங்குவதற்கான பயணமாகவுள்ளனர். அதேவேளை, பனை அபிவிருத்தி சபை விரிவாக்கல்துறை முகாமையாளர் கோபால கிருஸ்ணன் மற்றும் சிறு சுவடு பணிப்பாளர் பவானி உட்பட பலர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts