யாழ் போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த மாதம் 7 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சிற்றூழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சு வாய் மூலமான பதிலை தெரிவித்துள்ளது. அதனை எழுத்து மூலம் தருமாறு கோரி சிற்றூழியர்கள் இன்று காலை 8.30 மணி முதல் ஐந்து மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த லங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் அமைப்பாளர் இ.வசந்தராஜன்
கடந்த 16 ம் திகதி நாம் 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன் அறிக்கை கசுகாதார அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவர்கள் தற்போது 4 கோரிக்கைகைளை நிறைவேற்றுவதாக வாய் மொழி மூலம் தெரிவித்துள்ளனர். எமது லங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் தாய்ச் சங்கம் எழுத்து மூலமாக கோரிக்கைகைளை நிறைவேற்றுவதாக உறுதி தருமாறு கோரி 14 நாள் அவகாசம் வழங்கியிருந்தது. எனினும் இது வரை சுகாதார அமைச்சு பதில் எதையும் வழங்காததால் நாம் இன்று 5 மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளோம.
தொடர்ந்தும் சுகாதார அமைச்சு பதில் வழங்காதவிடத்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.