பட்டாசு வெடித்து சிறுவன் படுகாயம்

கரவெட்டி பகுதியில் பட்டாசு வெடித்ததில் முகத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (19) அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேயிடத்தைச் சேர்ந்த எம்.நிதுஷன் (வயது 10) என்ற சிறுவனே படுகாயமடைந்துள்ளான். எறிந்தும் வெடிக்காத நிலையிலிருந்த பட்டாசு ஒன்றை எடுத்து, முகத்திற்கு முன்பாக வைத்து ஊதும் போதே அது வெடித்துள்ளது.

முதலில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளான்.

Related Posts