காணாமல் போனோர் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு படைத்தரப்பிடமிருந்து இதுவரையிலும் 5,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைசெய்ய நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான குழுவுக்கே இந்த முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் எதிரிகளினால் காணாமல் போக செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற படைத்தரப்பைச்சேர்ந்தவர்கள் தொடர்பிலே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.